தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கைதானதை எதிர்த்து, அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான, ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில், அரசியல் சாசன நீதிமன்றம் அவருக்கும் சுமார் 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதித்துவிட்டது.
இதனை அவரின் ஆதரவாளர்கள் எதிர்த்தனர். மேலும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் ஜேக்கப் ஜூமா கடந்த வாரத்தில் காவல்துறையினரிடம் சரணடைந்து விட்டார். எனவே தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இவர்கள் சாலைகளில் போக்குவரத்தை மறித்து, வாகனங்களுக்கு நெருப்பு வைக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், கடைகளை அடித்து கலவரத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே நாட்டில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.