இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌத் ஆப்பிரிக்க அணி 16.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டி 20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக ஷிகர் தவான் 36 (25) ரன்கள் எடுத்தார். மேலும் ரிஷப் பன்ட் 19, ஜடேஜா 19 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 134 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளும், ஹென்ரிக்ஸ் மற்றும் பார்சுன் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 135 ரன்கள் இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டிகாக்கும், ஹென்டிரிக்ஸ்சும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். குறிப்பாக கேப்டன் டிகாக் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். நல்ல துவக்கம் கொடுத்த பின் ஹென்டிரிக்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து பவுமாவும், டிகாக்கும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இறுதியில் 16.5 ஓவரில் சௌத் ஆப்பிரிக்க அணி 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிகாக் 52 பந்துகளில் 79 ரன்களுடனும் (6 பவுண்டரி, 5 சிக்ஸர்), பவுமா 27 (23) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 1 விக்கெட் வீழ்த்தினார்.