தென்னாப்பிரிக்காவில் பெண் மந்திரி ஒருவர் மாணவிகளிடம் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள லிம்போபோ என்ற மாகாணத்தில் போபிரமதுபா என்ற பெண் மந்திரி, ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது, “பெண் குழந்தைகளுக்கு நான் கூறுவது இது தான். உங்கள் கால்களை விரிக்ககூடாது, புத்தகங்களை விரியுங்கள்.
வயதான ஆண்கள் விக்குகள், ஸ்மார்ட் போன்களை வைத்து இளம் பெண்களை ஈர்க்கிறார்கள் என்று கூறினார். இவ்வாறு அவர் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், அவர் பாதிக்கப்படும் மாணவிகளை குறை கூறுவதாகவும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவில்லை என்றும் இணையதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர். எனவே, அவர், “என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆண்களையும் தான் நான் கூறினேன்” என்று விளக்கம் கூறியிருக்கிறார்.