Categories
சினிமா தமிழ் சினிமா

“தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள்” நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்ற நடிகர் சூர்யா படங்கள்….. முழு லிஸ்ட் இதோ…..!!!!!

தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த விருது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பாண்டிலும் 67-வது ஃபிலிம் பேர் விருது வழங்கும் விழா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா இன்று (ஞாயிறு) கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனையடுத்து ஃபிலிம் ஃபேர் விருதுகளில் நாமினேஷன் செய்யப்பட்ட தமிழ் படங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

அதன்படி சிறந்த படங்களுக்கான நாமினேஷனில் சூரரைப் போற்று, சார்பட்டா பரம்பரை, மண்டேலா, கர்ணன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், க/பெ ரணசங்கம், ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு சிறந்த இயக்குனருக்கான நாமினேஷனில் ஜெய்பீம் படத்திற்காக இயக்குனர் ஞானவேலும், சூரரைப் போற்று படத்திற்காக சுதா கொங்காராவும், சார்பட்டா பரம்பரை படத்திற்காக பா. ரஞ்சித்தும், க/பெ ரணசிங்கம் படத்திற்காக பி. விருமாண்டியும், கர்ணன் படத்திற்காக மாரி செல்வராஜும், மண்டேலா படத்திற்காக மடோன் அஸ்வினும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்காக தேசிங்கு பெரியசாமியும் இடம் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து சிறந்த நடிகருக்கான நாமினேஷனில் நடிகர் சூர்யா, ஜெய்பீம் படத்தில் நடித்த கே. மணிகண்டன், நடிகர் துல்கர் சல்மான், நடிகர் தனுஷ், ஓ மை கடவுளே படத்திற்காக அசோக் செல்வன், நடிகர் ஆர்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் ஜெய்பீம் படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ், பொன்மகள் வந்தால் மற்றும் உடன்பிறப்பே படத்திற்காக நடிகை ஜோதிகா, சூரரைப் போற்று படத்திற்காக அபர்ணா பால முரளி,‌ க/பெ ரணசிங்கம் படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் சிறந்த இசை அமைப்பாளருக்கான நாமினேஷனில் ஓ மை கடவுளே படத்திற்காக லியோன் ஜேம்ஸ், சூரரைப் போற்று படத்திற்காக ஜீவி பிரகாஷ் குமார், அண்ணாத்த படத்திற்காக டி. இமான், தர்பார், மாஸ்டர் மற்றும் டாக்டர் படத்திற்காக அனிருத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Categories

Tech |