பூமாதேவிக்கும் , விஷ்ணுவின் அவதாரமாக இருக்கின்ற பன்றி அவதாரனமாக இருக்கின்ற வராக மூர்த்திக்கும் பிறக்கின்றார் நரகாசுரன். முதலில் நரகாசுரன் நல்லவனாக தான் இருந்தான். நாளடைவில் அவனுக்கு கொடூரனாக மாறி விடுகின்ற்றான். காரணம் அவன் பெற்ற வரம். தொடர்ந்து அரக்கத்தனமான வேலைகளை செய்து , இரக்கமே இல்லாமல் அனைவரையும் வஞ்சித்து தேவலோகத்தை கைப்பற்றுவதற்கு அவன் செய்த முயற்சி என பல வரலாறுகள் இருக்கின்றன. சுமார் 63 ஆயிரம் பெண்களை அவனுடைய அந்தப்புரத்தில் அடைத்து வைத்து அவர்களை மிக கேவலமாக நடத்தினான். அதில் அதிதை என்ற ஒரு பெண்மணி நரகாசுரனின் தொல்லை தாங்காமல் பூமா தேவியின் அவதாரமாக இருக்கின்ற சத்தியபாமா விடம் சென்று இந்த நரகாசுரன் செய்கின்ற அட்டூழியத்தை சொன்னார்.
இதனால் சினமுற்ற சத்யபாமா கிருஷ்ணனை அழைத்துக்கொண்டு வதம் செய்வதற்கு சென்றார். அவன் ஒரு விசித்திரமான வரத்தை பெற்றான். அந்த வரம் எப்படி என்றால் என்னை பெற்றெடுத்த தாயே என்னை கொல்ல வேண்டும் என்ற அந்த விசித்திர வரம். அப்போது போர் புரியும்போது தன் கையிலே இதுபோன்ற இருக்கக்கூடிய ஒரு ஆயுதத்தை எடுத்து கிருஷ்ணரை தாக்கினார் , அப்போது கிருஷ்ணர் மயங்கி விழுந்தார்.
இதைக்கண்ட சத்யபாமா அந்த நரகாசூரனை அடித்து கொன்றார். அப்படி அவன் உயிர் விடுகின்ற நேரத்திலே அன்னையே நான் என்னுடைய துஷ்ட செயல்களை புரிந்து கொண்டேன் நான் ஒரே ஒரு வேண்டுகோளை உங்கள் முன்னால் சமர்ப்பிக்கின்றேன். அது என்னவென்றால் இறந்த இந்நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கின்ற நாளாக இதை தீபாவளி என்ற பண்டிகை என்று வணங்கி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் படி செய்ய வேண்டும் என்று சொல்கிறார். அதை கிருஷ்ணன் ஏற்று தென்னிந்தியாவிலேயே இந்த முறையை தான் கடைப்பிடித்த தீபாவளி என்று கொண்டாடுகின்றோம்.