அமெரிக்கா, தென்கொரிய நாட்டுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்ள, கொரிய தீபகற்பத்தில் விமானங்களை குவித்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா அடிக்கடி அணு ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டு தென்கொரியாவையும், ஜப்பான் நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. எனவே, அந்த 2 நாடுகளின் நெருங்கிய நட்பு நாடான் அமெரிக்கா, வடகொரியாவிடும் அணு ஆயுதங்களை கைவிட வலியுறுத்தி வருகிறது.
இதனால், அமெரிக்கா, வடகொரியா, ஜப்பான் நாடுகளிடையே அடிக்கடி மோதல் உண்டாகிறது. இதனிடையே, வடகொரிய நாட்டின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், அமெரிக்காவும் தென்கொரியாவும் சேர்ந்து கொரிய தீபகற்பத்தில் அடிக்கடி கூட்டுப்பயிற்சியை மேற்கொள்கின்றன.
இதற்கு, வடகொரியாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஒரு மாதம் கழித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கண்டம் தாண்டி கண்டம் செல்லும் இரு ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ததாக, குற்றம் சாட்டபட்டது. இதனை வடகொரியா மறுத்தது. மேலும், உளவு செயற்கைக்கோளின் மாதிரியை சோதனை செய்ததாக தெரிவித்தது.
இந்நிலையில், கொரிய தீபகற்பத்தில், தென்கொரியாவுடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள அமெரிக்கா, டஜன் கணக்கில் போர் விமானங்களை குவித்திருக்கிறது. நேற்று இந்த பயிற்சி தொடங்கப்பட்டதாகவும், இந்த வாரம் முழுக்க பயிற்சி நடக்கும் என்றும் தென்கொரியா கூறியிருக்கிறது. இதனால், அங்கு அதிக பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு பதிலடியாக, வடகொரியாவும் தன் ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.