Categories
உலக செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் பயங்கரம்… ஆளும் கட்சி தலைவருக்கு பலத்த அடி… சுத்தியலால் அடித்த மர்ம நபர்…!!!

தென்கொரிய நாட்டில் அதிபர் தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில் ஆளும் கட்சித் தலைவர் மர்ம நபரால் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரிய நாட்டின் தலைநகரான சியோலில் அதிபர் தேர்தலுக்கு பிரச்சாரம் நடந்தது. அதில் பங்கேற்ற ஆளும் கட்சித் தலைவரானா சாங் யங்-கில்- பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரின் பின் பக்கத்தில் வந்த ஒரு மர்ம நபர் அவரை சுத்தியைக்கொண்டு பலமாக அடித்தார்.

இதில் அவரின் மண்டை உடைந்து அதிகமான ரத்தம் வெளியேறியது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரை தாக்கியது பிரபல யூடியூபர் என்றும் அவருக்கு 70 வயது முதியவர் என்றும் தெரியவந்திருக்கிறது.

Categories

Tech |