உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுக்கொள்ளாமல் செயற்பட்டுவரும் வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஹாம்யாங் (Hamyang) மாகாணத்தில் உள்ள சோன்டாக் பகுதியில் இருந்து 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற ஏவுகணைகள் மீண்டும் ஏவப்படலாம் என்றும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தென் கொரியா இராணுவம் கூறியுள்ளது.
முன்னதாக, வட கொரியா கடந்த வாரம் கடலில் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 மாதங்களில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியது இது இரண்டாவது முறையாகும்.