தென்கொரியாவில் கொரானா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வழிபாட்டின் போது தேவாலயத்தில் இருந்து வைரஸ் பரவியதால் தொலைக்காட்சி கேமராக்கள் மற்றும் நிருபர்கள் என ஏராளமானவர்கள் முன் மதப்பிரிவின் தலைவர். லீ மேன் ஹீ மண்டியிட்டு மன்னிப்பு கோரினார்.
ஷின்சியோன்ஜி பிரிவின் தலைவர் லீ மேன் ஹீ இவ்வாறு மன்னிப்பு கோரினார். ஷின்சியோன்ஜி தேவாலயத்தில் வழிபட்ட பெண் மூலம் பலருக்கும் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது.
யாரையும் குற்றம் சாட்டுவதற்கான நேரம் இது அல்ல; மேலும் தனது மத அமைப்பு சுகாதார அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்போம், என்று கூறினார். வழிபாட்டாளர்கள் முழு பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளோம்.
இங்கு வழிபடுபவர்கள் அனைவரும் குழந்தைகள் போல, மரணத்தைக் விளைவிக்கும் இத்தகைய பயங்கரமான நோய் பரவும் போது எந்த பெற்றோரும் அமைதியாக இருக்கமாட்டார்கள். இது எப்படி நடந்தது என்று தெரியாது ஆனால் நாங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்வோம்.