Categories
உலக செய்திகள்

அடையாளம் தெரியாத இரு ஏவுகணைகள்… கடலில் ஏவி சோதனை செய்த வட கொரியா..!

வட கொரியா கடலில் ஏவி அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று வட கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் இருக்கும்  வோன்சான் பகுதியில் இருந்து கிழக்கு  நோக்கி இந்த இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.சுமார் 240 கி.மீ. தூரம் சென்ற இந்த ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய  குறைந்த தூர ஏவுகணைகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Image result for North Korea has launched two unidentified projectiles, South Korea's military says, in its first apparent weapons test

இதுபோன்ற ஏவுகணைகள் மேலும் ஏவப்படலாம் எனவும், தென் கொரிய இராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், எதற்கும் தயார் நிலையில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் வட கொரியா ஏவுகணை சோதனையை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

Image result for North Korea has launched two unidentified projectiles, South Korea's military says, in its first apparent weapons test

நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை பரிசோதனை செய்வதற்கான தடை உத்தரவை திரும்பப் பெறுவதாக வட கொரியா அறிவித்த சில வாரங்களிலேயே, ஏவுகணை சோதனை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |