இளவரசர் பிலிப்பினுடைய ஆன்மா இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது மகாராணியாருக்கு கிராமத் தலைவர் அல்பி கடிதம் அனுப்பியுள்ளார்.
தென் பசிபிக் தீவில் 12 என்ற கிராமம் உள்ளது. இளவரசர் பிலிப் மரணச் செய்தி கேட்டதும் அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் துக்கம் அனுசரித்து வருகின்றனர். அதே தீவில் யாகேல் என்னும் மற்றொரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள மக்கள் இளவரசர் பிலிப்பை புனிதராக கருதுகின்றனர். அவர் இறந்திருந்தாலும் அவரின் ஆன்மா இந்த உலகில் வாழ்கிறது. அது இன்னொரு உடலை தேடிக் கண்டுபிடித்த அதில் வாழத் தொடங்கும் என கிராமத்தினர் கூறியுள்ளனர்.
அந்த கிராம தலைவரான அல்பி மகாராணியாருக்கு ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இளவரசர் பிடிப்பின் உடல் மறைந்தாலும் அவர் ஆன்மா இன்னும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதால் மகாராணியார் மகிழ்ச்சியுடன் இருக்குமாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். 1924 ஆம் ஆண்டு இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியார் எலிசபெத் அந்த தீவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.