தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு நாளை தொடங்க இருக்கிறது. இந்த ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து மாவட்டத்திற்குள் இயங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் விமான போக்குவரத்து ரயில் போக்குவரத்துக்கிற்கான தடை தொடரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதன் காரணமாக, தமிழகம் மத்திய அரசிற்கு கொடுத்துள்ள கோரிக்கையை ஏற்று சிறப்பு ரெயில்கள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சிறப்பு ரெயில்கள் தமிழகத்தில் இயக்கப்படாது என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு வைத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு செப் 15-ம் தேதி வரை சிறப்பு ரெயில்கள் சேவை இயக்கப்படாது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.