Categories
தேசிய செய்திகள்

சம்பளம் கொடுக்க கூட காசு இல்லை… ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம்..!!

நிதி உதவி கேட்டு ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின்  கடிதம் அனுப்பியுள்ளார்.

பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர கூடுதல் நிதி ஒதுக்குமாறு கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி வரை 22 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், முறையாக கணக்குடன் அதற்கான ரசீதுகள் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 40 கோடி ரூபாய்  செலவுக்கான ரசீதுகள் தயாராக உள்ளதாகவும் கடிதத்தில் ராகுல் ஜெயின் குறிப்பிட்டிருந்தார்.

Image result for south railway

ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்கனவே 39 கோடி கொடுக்க வேண்டியது இருப்பதாகவும், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை செய்யப்பட்ட பணிகளில் பெண்களுக்கு மட்டும் ஊதியம் வழங்க தற்போதைய நிதி போதுமானதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் ஒப்பந்ததாரர்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையில்,  மூலப் பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

Image result for south railway

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கடந்த நிதி ஆண்டை விட இந்த ஆண்டு  அதிக அளவிலான நிதி ஒதுக்க ரயில்வே வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக அடுத்த ஒரு சில வாரங்களில் 110 ரயில்களில் பராமரிப்பு பணிகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

Categories

Tech |