Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தென்மேற்கு பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்!!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் கோடை காலமான மே மாதம் முடிந்த பிறகு  வெயிலுக்கு சூட்டை தணிப்பது போல்  ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்கிறது. இந்த மழையினால் பசுமை இந்தியாவில் உள்ள அணைகள் நிரம்பி வழிகிறது.

Image result for இந்திய வானிலை ஆய்வு மையம்இந்தியாவின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்கு பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில்  இந்தாண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 4-ஆம் தேதி தொடங்குமென்றும், ஆனால் சராசரியை விட சற்று குறைவாகவே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |