Categories
மாநில செய்திகள்

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை மே 16ம் தேதி தொடங்க வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என சென்னை வானிலை  மையம் தகவல் அளித்துள்ளது. அந்தமான் பகுதிகளில் வரும் 13ம் தேதி முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால் மே 16ம் தேதி அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால் 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது

Categories

Tech |