ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 36 மணி நேரங்களில் 3 ராக்கெட்டுகளை வானத்தில் ஏவி சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் உலகப் பணக்காரராகவும் திகழ்கிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, விண்வெளி குறித்த பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சுமார் 36 மணி நேரங்களில் 3 ராக்கெட்டுகளை வானில் ஏவி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதேபோன்று கடந்த ஜனவரி மாதத்திலும் இரு தினங்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது மூன்று ராக்கெட்டுகளை ஏவி சாதனையை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.