ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் செர்ஜியோ பஸ்கெட்ஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது, பரிசோதனையில் தெரியவந்தது .
16 வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ,) வருகின்ற 11ம் தேதி முதல் ஜூலை 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 நாடுகளில் நடக்கும் இந்தப் போட்டியில், 24 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டிக்கு தயாராக , ஒவ்வொரு அணியும் தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டனான செர்ஜியோ பஸ்கெட்ஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனால் அவர் அணியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற வீரர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை. இருந்தாலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்தபடுவார்கள் என்று ஸ்பெயின் கால்பந்து அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் ஸ்பெயின் கால்பந்து அணி தனது முதலாவது லீக் போட்டியில், வருகின்ற 14ஆம் தேதி சுவீடனுடன் மோதுகிறது . ஆனால் இந்தப் போட்டியில் கேப்டன் செர்ஜியோ விளையாடுவது சந்தேகம் தான். ஸ்பெயின் அணியின் கேப்டனான செர்ஜியோ இதுவரை 120 க்கும் மேற்பட்ட போட்டிகளில், விளையாடி உள்ளார் . அதோடு 2010 ம் ஆண்டு உலக கோப்பை மற்றும் 2012 ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்ற, ஸ்பெயின் அணியில் அவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.