லாபால்மா எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியாகியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் கானேரி தீவில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. இத்தீவில் சுமார் 85000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தீவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இதனைஅடுத்து லா பால்மா எரிமலை வெடித்தது. இதனால் ஏற்பட்ட கரும்புகையானது சில கிலோ மீட்டர் தூரம் வரை வானத்தில் பரவியுள்ளது. மேலும் எரிமலையில் இருந்து தொடர்ச்சியாக நெருப்பு குழம்பு வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் எரிமலை வெடிப்பிற்கு முன்னரே அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தபட்டுள்ளனர். இதனால் அங்கு உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. மேலும் எரிமலை வெடிப்பினால் அங்குள்ள சுமார் 190 வீடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக இந்த எரிமலையில் இருந்து வெளியாகும் நெருப்பு குழம்பானது அட்லாண்டிக் கடலில் கலக்கும் பொழுது ஆபத்தான விஷ வாயுக்கள் வெளியாகும் என புவியியல் ஆய்வு மையத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.