ஸ்பெயினில் கொரோனா தொற்று காரணமாக அங்கு முழு ஊரடங்கு அடுத்த மாதம் 9 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன.. அந்த வகையில், ஸ்பெயினில் மார்ச் 14 முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அங்கு உயிரிழப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவை அடுத்து மூன்றாவது அதிகபட்ச இறப்பு பதிவாகும் நாடாக இது உள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஸ்பெயினில் 200,210 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்நிலையில் நாடு தழுவிய முழு அடைப்பை மே 9 வரை நீட்டிப்பதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.