அதிகளவு பனிப்பொழிவு காரணமாக ஸ்பெயினில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பனியால் மூடப்பட்டு பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் பிளோமினா என்று பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் பணியால் மூடப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் சாலைகளில் நகர முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. அதோடு அங்கு சென்ற சுற்றுலா பயணிகளும் சுற்றுலா தலங்களை விட்டு திரும்பி வர முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த பனிப்பொழிவு காரணமாக மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரிக்கும் என ஸ்பெயின் நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த பனிப்பொழிவு காரணமாக அந்த நாட்டில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிக பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள சுற்றுலா பகுதிகள், வீடுகள் போன்ற பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.