குழந்தையை மீட்க மணப்பாறையைத் தாண்டி வந்த ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பழுது காரணமாக பூலாங்குளத்துப்பட்டி என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 30 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் குழந்தை மீட்கப்படாதது பெற்றோர்கள், பொதுமக்களிடயே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரிக் இயந்திரத்தை கொண்டுவர உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குழந்தை விரைவில் மீட்கப்படும் என்றும் மீட்புப் பணியினர் நம்பிக்கையளித்து வருகின்றனர்.
Categories