Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்…. வெறிச்சோடிய நாடாளுமன்றம்… உரை நிகழ்த்திய ஸ்பெயின் பிரதமர்!

அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்றத்திற்கு சில உறுப்பினர்கள்  மட்டுமே வந்திருந்த நிலையில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உரை நிகழ்த்தினார்.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில்  (Madrid) உள்ள நாடாளுமன்றத்தில் 350 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதன் காரணமாக பெரும்பாலான உறுப்பினர்கள் அவைக்கு வரவே இல்லை. அமைச்சர்கள் 5 பேர் மற்றும் உறுப்பினர்கள் 28 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

Image result for Spanish Prime Minister Pedro Sanchez speaks on coronavirus disease (COVID-19) at the Parliament in Madrid, Spain

இருப்பினும் உறுப்பினர் இல்லாத வெறும் அவையில் பேசிய பிரதமர் பெட்ரோ சான்செஸ், அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளதை குறிப்பிட்டார். முன்னதாக பிரதமரின் மனைவி பெகோனா கோமசும் (María Begoña Gómez) கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |