பிரபல பாடகர் எஸ்பிபி கொரோனவிலிருந்து மீண்டுவர, ஆண்டவனை வேண்டிக் கொள்ளுமாறு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் உடல் நிலை மோசம் அடைந்ததையடுத்து ஐசியு பிரிவுக்கு மாற்றப்பட்டு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று நம்பிக்கை பதிவுகளை சினிமா துறை நட்சத்திரங்கள் தொடர்ந்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகர் தனுஷ் தயவு செய்து அனைவரும் SPB க்காக வேண்டிக் கொள்ளுங்கள். கண்டிப்பாக நம்புவோம் அவர் நம்மிடையே மீண்டும் திரும்பி வருவார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இவரை போலவே AR ரஹ்மான், இளையராஜா, கிரிக்கெட் வீரர் அஸ்வின் என பல பிரபலங்களும் SPB மீண்டு வர பிராத்தனை செய்து ட்விட்டரில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.