உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பலருக்கும் அது குறித்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் அந்த நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்பட போட்டிகளிலும், பயிற்சிகளிலும் இன்னும் பல நிகழ்வுகளில் பங்கேற்பார்கள். தற்போது கைபேசிகளே தரமான முறையில் படங்களை எடுக்கும் வசதிகளைக் கொண்டு இருப்பதால் பலரும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி 1839 ஆம் வருடம் புகைப்படம் எடுக்கும் வசதியை ஜோசப் மற்றும் லூயிஸ் என்பவர்கள் பிரான்ஸ் நாட்டில கண்டுபிடித்தனர்.
அந்தக் கண்டுபிடிப்பை 1839 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி பிரான்ஸ் அரசு உலகிற்கு அறிமுகப்படுத்தியது. அந்த நாளை நினைவு படுத்தும் விதமாக ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பலவிதமான நினைவுகளையும் நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு அவர்களுடன் நாம் இருந்த நாட்களை நினைவு படுத்தி மகிழ்வதற்கும் புகைப்படம் உதவுகிறது. அதிகாரப்பூர்வமற்ற அனைத்து விஷயங்களும் நாம் மகிழ்ச்சியான சம்பவங்களையும் இனிமையானவர்களையும் மட்டுமே புகைப்படமாக எடுத்து மகிழ்கின்றோம்.
இழப்புகளையும் மனதிற்கு வருத்தத்தை அளிக்கும் வேறு எதையும் அதிக அளவில் புகைப்படம் எடுப்பது இல்லை. ஆனால் புகைப்படக் கருவிகள் இல்லாத அந்த நாட்கள் இருந்திருக்கிறது என்று நினைக்கையில் ஆச்சரியம் தான். அப்பொழுது முக்கிய நிகழ்வுகளை எப்படி நினைவில் கொள்ள வழி செய்திருப்பார்கள் அதை ஆராயும் போது அன்று திறமையாக படம் வரையக்கூடிய பலர் இருந்திருக்கின்றனர் என்பது தெரிகின்றது. 100% அச்சுஅசலாக இல்லாவிட்டாலும் ஒரு புகைப்படக் கருவியின் வேலையை பல செய்து வந்திருக்கின்றனர் என்பதை அறிய வரும் போது நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பதை யூகிக்க முடிகிறது.
ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள உறவினர்களையும் நண்பர்களையும் நேரடியாக பார்க்கும் அவர்களோடு உறவாடும் அதிக வசதிகள் வந்துவிட்டாலும் இப்போதும் புகைப்படங்கள் எடுத்து நமது நினைவுகளை பத்திரப்படுத்தும் செயல்பாடு எள்ளளவும் குறைந்ததாக இல்லை.இதுவே புகைப்படங்களின் சிறப்பு ஆல்பம் கையில் வைத்து பார்த்ததில்லை என்றாலும் கணினியில் சேமித்து வைத்து அவ்வபோது பார்த்து ரசித்து இருக்கிறோம். அதோடு புகைப்படத்திற்கு என்று தனிச்சிறப்பு உண்டு. அது ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பதே.