Categories
அரசியல் தேசிய செய்திகள்

19_ஆம் தேதி சபாநாயகர் தேர்தல்….மீண்டும் பெண் தலைவருக்கே வாய்ப்பு…!!

நடைபெறும் மக்களவை சபாநாயகருக்கான தேர்தலில் இந்த முறையும் பெண் தலைவருக்கே வாய்ப்பிருப்பதாக கருதப்படுகின்றது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக  வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தின்  முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் பாஜகவின் MP வீரேந்திரகுமாரை மக்களவையின் இடைக்கால சபாநாயகராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Speaker Sumitra Mahajan and Meira Kumar க்கான பட முடிவு

இந்நிலையில் மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்தல் வருகின்ற  19_ஆம் தேதி நடைபெறுகின்றது. ஏற்கனவே 15-ஆவது மக்களவையில் சபாநாயகராக மீராகுமாரும், 16-ஆவது மக்களவையில் சுமித்ரா மகாஜனும் பதவி வகித்ததால், 17-ஆவது மக்களவை சபாநாயகர் பதவியும் பெண் தலைவருக்கே வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |