கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சபாநாயகர் சரியான முடிவெடுத்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்ததை அடுத்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பாஜகவினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆளுகின்ற அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதில் காலம் தாழ்த்தி வருகிறது. ஆகையால் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு சபாநாயகரை உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துமாறு கர்நாடகா ஆளுநர் விஜுபாய் வாலாவிடம் பாரதிய ஜனதா கட்சியினர் முறையிட்டனர்.
ஆனால் சபாநாயகர் முடிவு செய்யவேண்டிய இப்பிரச்சனையில் யாரும் தலையிட முடியாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதன்படி கவர்னரும் இப்பிரச்சனையில் சபாநாயகரை வலியுறுத்த முடியாது. ஆகையால், கர்நாடகா கவர்னர் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை நடத்த கோரி முதல்வர் குமாரசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கெடு விதித்து ஆளுநர் அனுப்பிய கடிதம் என்னை காயப்படுத்தி விட்டது என்றும், ஆளுநரின் உத்தரவை பின்பற்றாததால் ஏற்படும் விளைவிலிருந்து சபாநாயகர் தான் என்னை காக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.