மக்களவையில் திருமாவளவனை கர்நாடக MP_க்கள் பேச விடாமல் தடுத்ததால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.
மக்களவையில் கூட்டத்தில் இன்று சிதம்பரம் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , காவேரியில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டுமென்று பேசினார். அப்போது அங்கிருந்த கர்நாடக MP_க்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். எங்களுக்கே தண்ணீர் இல்லை. வறட்சியில் இருக்கின்றோம் என்ற முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து திருமாவளவன் பேச முயன்ற போது பேச விடாதவாறு கர்நாடக MP கூச்சலிட்டதை சபாநாயகர் ஓம் பிர்லா பேசவிடுங்கள் என்று கூறினார். இருந்தும் அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் மக்களவையில் சற்று அமளி ஏற்பட்டது. திருமாவளவன் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டுமென்று பேச இருந்த சூழலில் தொடர் அமளியில் முழுமையாக பேச முடியவில்லை.