ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன், என்னை பொறுத்த வரைக்கும், நான் அதிகம் பேசணும்னு நினைக்கிற தமிழ் இனத்தில் பிறந்த ஒருவனாக…. நான் எப்பொழுதும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. பேச்சு ஒருபோதும் தமிழ் இனத்தை இனி காப்பாற்றாது. செயல் ஒன்று மட்டும்தான், இனி தமிழ் நிலத்தையும், தமிழ் இனத்தையும், தமிழ் மொழியையும் காப்பாற்றும் என்பதை உறுதியாக நம்புபவன் நான்.
கவிஞர் காசி ஆனந்தன் சொன்னது போல மாடியிலிருந்து துப்பினால் குடிசையில் விழும். குடிசையில் இருந்து துப்பினால் மாடியே விழும் என்பதை மனதில் வைத்துக் கொள்வது அவர்களுக்கு நல்லது. இந்திய ஒன்றியத்தில் 125 கோடி மக்களின் 1,635 மொழிகள் பேசுகின்றோம். இந்திய ஒன்றியத்தில் எத்தனையோ, தேசிய இனங்கள் இருக்கிறது.10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பேசுகின்ற மொழி 122 மொழி. அதில் 8000 ஆண்டுகளுக்கு முன்பே…
இன்னுமா அதனை வரையறுக்க முடியல. இன்னும் சொல்லப்போனால் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மொழி என்கின்றார்கள் தொல்காப்பியத்தை… நம்முடைய தமிழ் மொழியை, ஒரு இலக்கண நூல். ஆனால் 1500 ஆண்டுகள் கூட வரலாறு இல்லாத ஒரு இந்தி மொழியை, எங்கள் தமிழ் மொழியை அழிக்க திணித்து, நீங்கள் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என நிறுவ நினைப்பது என்ன வார்த்தை கொண்டு சொல்வது என தெரிவித்தார். இதில் தமிழ் தமிழ் என பேசினால் போதாது, செயலில் காட்டவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கௌதமன் மறைமுறைகமாக விமர்சித்துள்ளார்.