பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை,பெண்களை இழிவாக பேசிய ஸ்டாலினுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் வளாகத்தில் அம்மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி இவ்விழாவினை தொடங்கி வைத்தார். மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சியான சிலம்பாட்டத்தில் தொடங்கி, அதன்பின் 600க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.பின் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது, கரூருக்கு வந்த ஸ்டாலின் பெண்களை கொச்சைப்படுத்தி படுத்திப் பேசி உள்ளதால் அவருக்கு வருகின்ற வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கரூர் பெண்கள் பதிலடி கொடுப்பார்கள்.
மேலும், தமிழர்களின் நாகரிகம் பண்பாட்டை கேவலப்படுத்தும் திமுகவிற்கு வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டும் விதமாக இப்பொங்கல் அமைந்துள்ளது. இந்துக்களை கேவலமாக பேசும் ஸ்டாலினை நாங்கள் எதிர்த்து மகளிரின் ஆதரவோடு பாஜகவின் வெற்றியை நிரூபிக்கும் அச்சாரமாக இப்பொங்கல் அமைந்துள்ளது என்றார்.