Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அப்ரூவர் ஆகிறார் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை ? அடுத்தடுத்து திருப்பம் …!!

தந்தை – மகன் கொலை வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை அப்ரூவர் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை – மகன் மரணமடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக காவல் ஆய்வாளர், 2 துணை ஆய்வாளர், 2 தலைமை காவலர் என 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில் முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்ததில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த பால் துறை சிபிசிஐடியின் சாட்சியாக அப்ரூவராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே தலைமை காவலராக இருந்த ரேவதி சாட்சியமாக இருக்கும் நிலையில் தற்போது சிறப்பு உதவி  காவலர் பால்துறையும் அப்ரூவர் ஆக இருக்கின்றார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்புக்கு எதிராக சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்து 2 சாட்சியாக மாறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |