கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு செக்போஸ்டில் காவலுக்கு இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதில் சம்பவ இடத்திலேயே வில்சன் உயிரிழந்தார். வில்சனை சுட்டுக்கொன்றுவிட்டு ஸ்கார்பியோ காரில் தப்பியோடிய நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.