Categories
தேசிய செய்திகள்

வெங்கையா நாயுடுவின் சிறப்பு மின்னணு புத்தகம்… வெளியிட்ட பிரகாஷ் ஜவடேகர்…!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மூன்று வருடகால பணி நிறைவை முன்னிட்டு மின்னணு புத்தகக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 வருட கால பணி நிறைவடைவதை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், “இணைதல், தொடர்புக் கொள்ளுதல், மாற்றத்தை உருவாக்குதல்” என்ற மின்னணு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இந்த புத்தகத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதன் அச்சுவடிவிலான ‘காபி டேபிள்’ என்ற புத்தகத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

இந்த விழாவை சிறப்பித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், “இந்த புத்தகம் என்னுடைய குறிக்கோள்கள், விளைவுகளை வெளிப்படுத்தி காட்டுகிறது. சென்ற ஒரு ஆண்டின் முதல் கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பொது நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டேன். சராசரியாக ஒரு மாதத்தில் 20 பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். தற்போது கொரோனா பாதிப்பால் பொது நிகழ்ச்சிகள் குறைந்துவிட்டது” என்று அவர் கூறினார். மேலும் வெங்கையா நாயுடுவின் வெளிநாட்டு பயணங்கள், உலகத் தலைவர்களுடனான கலந்துரையாடல், மற்றும் பல்வேறு நாடுகளில் இந்திய வம்சாவளியினருடன் அவர் ஆற்றிய உரைகள் போன்றவை இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன .

Categories

Tech |