Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தராசு படிகளுக்கு முத்திரை வைக்கும் சிறப்பு முகாம்”…. வெளியான தகவல்…!!!!!

தராசு படிகளுக்கு முத்திரை வைக்கும் சிறப்பு முகாம் ஆறு நாட்கள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழிலாளர் துறை திருச்செந்தூர் முத்திரை ஆய்வாளர் ராம்மோகன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சங்கர கோமதி உள்ளிட்டோர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி உத்தரவின் பேரில் தூத்துக்குடி தொழிலாளர் உதவியாளர் ஆலோசனையின்படி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முத்திரையிடப்படாத தராசு படிகள் வைத்திருக்கும் வணிகர்கள் முத்திரையிடுவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகின்றது.

இம்முகாம் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வருகின்ற 7ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து முத்திரையிட்டு கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. இதனை வணிகர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Categories

Tech |