பிகில் கைதி உள்ளிட்ட எந்த திரைப்படங்களுக்கும் தீபாவளி சிறப்பு காட்சி அனுமதி இல்லை என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆணிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்பொழுது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிகில்,கைதி உள்ளிட்ட எந்த திரை படத்திற்கும் தீபாவளி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேற்கொண்டு விதிகளை மீறி சிறப்பு காட்சிகளை ஒளிபரப்பும் திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளிக்கிழமை வெளியாகும் பிகில் படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிக்கான டிக்கெட் பல திரையரங்குகளில் சில நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.