தனியார் பள்ளியின் விடுதியை 250 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை போன்ற பகுதிகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் அங்குள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காரமடை அருகில் இருக்கும் தனியார் பள்ளியின் விடுதியை சிகிச்சை மையமாக மாற்ற தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 250 படுக்கை வசதிகளுடன் தயாராகும் இந்த கொரோனா சிகிச்சை மையத்தை மேட்டுப்பாளையம் தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் போன்றோர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது 250 படுக்கை வசதிகளுடன் தயாராகும் இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் தேவைப்பட்டால் கூடுதலாக 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.