Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு எழுத தனிமைப்படுத்த பகுதிகளுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு!

10ம் வகுப்பு தேர்வு எழுத தனிமைப்படுத்த பகுதிகளுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவுகளுக்கு இடையே தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் படிக்கும் அதே பள்ளியில் தேர்வுகள் எழுதலாம். மேலும் ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த மாணவர்கள் பொதுத்தேர்வு மையங்களில் தேர்வு எழுதக் கூடாது. தனிமைப்படுத்த பகுதிகளுக்கு அங்கேயே சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் மாணவர்கள் வேறு வேறு மாவட்டங்களில் உள்ள நிலையில் 100 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |