Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிரமப்படும் விவசாயிகள்….. பிரத்யேக நவீன இயந்திரம் அறிமுகம்….. அதிகாரிகளின் தீவிர சோதனை….!!

வேளாண் பொறியியல் துறை சார்பில் மரங்களிலிருந்து தேங்காய் பறிப்பதற்காக நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய பகுதிகளில் 2 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் இருக்கின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் இளநீர் மற்றும் தேங்காய் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் 60 அடி உயரம் வரை இருக்கும் தென்னை மரங்களில் தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தேங்காய் பறிப்பதற்காக நவீன இயந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என வேளாண் பொறியியல் துறைக்கு விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேளாண் பொறியியல் துறையினர் தேங்காய் பறிப்பதற்காக நவீன இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளனர். இது குறித்து வேளாண் பொறியியல் துறையினர் கூறும்போது, மினி லாரியில் பொருத்தப்பட்டுள்ள ஹைட்ராலிக் என அழைக்கப்படும் இயந்திரம் 52 அடி உயரம் வரை செல்லும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எந்திரத்தை மேல் நோக்கி போக வைத்து அதன் பெட்டியில் இரண்டு பேர் நின்று கொண்டு தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பெட்டி 360 டிகிரியில் சுழலும் தன்மை கொண்டதால் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு எளிதாக செல்ல முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு மணி நேரத்தில் எத்தனை மரங்களில் தேங்காய் பறிக்கலாம் எனவும், ஒரு லிட்டர் டீசலை பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு நடைபெறுவதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிந்த பிறகு அரசிடம் ஒப்புதல் பெற்று நவீன தேங்காய் பறிக்கும் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |