அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. மக்கள் வீட்டிலிருந்தபடியே பொருட்களை வாங்கி வருவதால் இவ்வாறு தள்ளுபடி காலங்களில் நல்ல பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் விற்பனை தளத்தில், இன்று மற்றும் நாளை (ஜூலை 27-ஆம்) தேதிகளில் பிரைம் டே விற்பனை நடைபெற உள்ளது.
இந்த இரு நாட்களில் எலக்ட்ரானிக்ஸ் தொடங்கி ஆடைகள் வரை பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக பிரைம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும், தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பிரைமில் வாடிக்கையாளராக www.amezon.in இணையதளத்தில் வருடத்திற்கு ரூ.999 மூன்று மாதங்களுக்கு ரூ.329 செலுத்தி இணைந்து கொள்ளலாம்.