Categories
மாநில செய்திகள்

SPECIAL NEWS: பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி….!!!

மாணவர்கள் 9-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் தரவரிசைப்படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து கல்லூரி, பாலிடெக்னிக்களில் மாணவர் சேர்க்கை எப்படி நடத்துவது என்பது குறித்த குழப்பம் நீடித்தது. இந்தநிலையில், 9ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்குநருக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |