Categories
கவிதைகள் பல்சுவை

ஆசிரியர் தினம் கொண்டாடும் ஆசான்களுக்காக… மெய்சிலிர்க்கும் சிறப்பு கவிதை..!!

உங்கள் சிவப்பு மை பேனாக்களால்,எங்கள் தலையெழுத்தை திருத்திய பிரம்மாக்களே! 

சொல் ஒலி கொண்டு எங்கள் உள் ஒளி செதுக்கிய நீங்கள் ஒவ்வொருவரும் சிற்பிகளே!

ஆண்டுதோறும் எங்கள் அறிவுத்தாகம் மாற்றியதால் நீங்கள் அத்தனை பேரும் அருவிகளே! 

எங்களுக்கு தோன்றிய போதெல்லாம் உங்களை பிரட்டினோம் நாங்கள் பிரட்டிய போதெல்லாம் நீங்கள்  பொருள் தந்தீர் ஆதலால் நீங்கள் அகராதிகள்!

காலூந்தி மேலேற தோல் தந்ததால் நீங்கள் ஏணிகள்!

நாங்கள் தடுக்கிய போதும், தடுமாறிய போதும் நேற்படுத்தினார்கள் எங்களை நெறிபடுத்தினீர்கள்!

Related image 

மனப்பாடம் என்னும் சிலுவையை பிடுங்கி எறிந்துவிட்டு, புரிதல் என்னும் கிரீடம் தந்தீர்!

நாங்கள் மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தவற்றை அமிர்தமாய் விழுங்க செய்தீர்! 

உங்கள் பிடிப்பின்  இறுக்கத்தை சமயத்தில் நான் சலித்திருக்கிறேன், அப்போதெல்லாம் எனக்கு தெரியாது நீங்கள் படித்தது என்னவோ நான் விழாமல் இருக்க தான் என்று! 

சமயத்தில் என்னை வளைத்தற்க்காய் நான் வருந்தியிருக்கிறேன் அப்போதெல்லாம் தெரியாது என்னை வளைத்ததென்னவோ வில்லாக்கத்தான் என்று!

உங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பெயர் இருக்கலாம் உங்கள் அத்தனை பேரையும் மொத்தமாக அழைக்க வேண்டும் என்றால் சரஸ்வதி என்றுதான் அழைக்கவேண்டும். ஆம் நீங்கள் வீணை ஏந்தாத சரஸ்வதி வீணை ஏந்தினால் அது மிகச் சரி! 

அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..!

Categories

Tech |