Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பஞ்சமி திருதியை… சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்… பக்தர்கள் இன்றி பூஜை..!!

சேலம் மாவட்டத்தில் பஞ்சமி திருதியையொட்டி வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கொம்பேரிகாடு பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் வாராகி அம்மன் சன்னதி இருக்கிறது. அந்த அம்மனுக்கு பஞ்சமி திருதியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.

மேலும் அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள்  இன்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட்டு பூர்ண குணமடைய வேண்டுமென பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |