சங்கடஹர சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராசாப்பட்டி, அண்ணாநகர், இருளப்ப நகர், தேவர் நகர், பெரியார்நகர், கண்மாய்பட்டி சூர்யாநகர், சுண்டங்குளம், ஏ. லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, கல்லமநாயக்கர்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அலங்காரத்துடன் இந்த பூஜையானது விநாயகர் கோவிலின் நடை பெற்றுள்ளது. இந்த பூஜையில் பக்தர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.