புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வருடந்தோறும் பள்ளிவாசல்கள் அல்லது ஒரு மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம்.
ஆனால் ஊரடங்கால் வீடுகளில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உறவினர்களும் நண்பர்களும் செல்போன் மூலமும், நேரிலும் வாழ்த்துக்களை தெரிவித்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.