Categories
ஆன்மிகம் இஸ்லாம்

இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலம் – அணைத்து மசூதிகளில் சிறப்பு தொழுகை..!!!

இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு அணைத்து  மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைப்பெற்று வருகிறது.

 

இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடபடும் பக்ரீத் பண்டிகை துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபட்டுவருகிறது. இந்நிலையில் இந்த பக்ரீத் பண்டிகை சந்தோசமாக கொண்டாடபடுவதால் மசூதிகள், மைதானங்கள் போன்ற இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கல் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.

Image result for பக்ரீத் 2019

மேலும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினர். இஸ்லாமியர்கள் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பியதும் இறைவனுக்கு ஆடு, மாடு, உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி எனப்படும் புனித பலி கொடுத்து, அந்த இறைச்சியை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Categories

Tech |