Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆடி மாதத்தை முன்னிட்டு… அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்… பக்தர்கள் தரிசனம் அனுமதி இல்லை…!!..!!

ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் ஆடி மாதத்தில் வருகின்ற அனைத்து வெள்ளிக்கிழமை தினங்களிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதனால் இம்மாவட்ட கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை ஆராதனை மற்றும் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன்பின் அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்துள்ளார். பின்னர் கோவில் வளாகத்தில் பூப்பந்தல் அமைத்து நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் சாமியை தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனைப் போன்று இம்மாவட்ட நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது. பின் குமாரசாமி பேட்டையில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோவில் மற்றும் உழவர் தெரு மாரியம்மன்-செல்லியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்று உள்ளது. இதே போல் கடை வீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் மாரியம்மன் கோவில் என பல அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது. இதனை அடுத்து அருகே உள்ள கேரகொடாகல்லி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீஅதிர்ஷ்ட வாராஹி அம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது.

இதில் அம்மனுக்கு மகா தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றுள்ளது. பின்னர் இலக்கியம்பட்டியில் அமைந்திருக்கும் புத்து கோவிலில் இம்மாதம் 3-வது வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதனைப் போல் பாப்பிரெட்டிப்பட்டி, பொண்ணாகரம், அரூர், ஏரியூர், பொம்மிடி, கடத்தூர், பாப்பரப்பட்டி, மொரப்பூர், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், மொரப்பூர், ஆகிய பகுதிகளிலுள்ள காளியம்மன், அங்காளம்மன், பூவாடைக்காரி மற்றும் மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் 3-வது வெள்ளிக் கிழமை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது.

 

 

Categories

Tech |