Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புதிதாக 15 குழுக்கள்… தீவிர கண்காணிப்பில் ஈடுபட தயார்… அதிகாரி கூறிய தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது கண்காணிப்பதற்காக புதிதாக 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிபவர்கள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் வாகன சோதனை மையங்கள் அமைத்து காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனையடுத்து சேலம் மாநகரில் புதிதாக குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துறை துணை கமிஷனராக மூர்த்தி பொறுப்பேற்றுள்ளார். அவர் கூறியுள்ளதாவது சேலம் மாவட்டத்தில் பொது மக்கள் நடமாட்டத்தை தடுக்க மாநகரில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் வருவாய்த்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |