கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து நடைமுறைபடுத்தி வருகிறது.
அதன்படி , அரசு பேருந்து சேவைகள் தொடங்கிவிட்ட நிலையில், இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர்- திருச்சி இடையே அக்டோபர் 27-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரில் இரவு 11.15 க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.45-க்கு திருச்சி சென்றடையும். அதேபோல் அக்டோபர் 26-ஆம் தேதி முதல் திருச்சியில் இருந்து 10.45 க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4:15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்று அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.