Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வருகிற 4-ஆம் தேதி முதல்….. சிறப்பு ரயில்கள் இயக்கம்….. தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தென்மேற்கு ரயில்வே பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் பொருட்டு மைசூர்-தூத்துக்குடி, எஸ்வந்த்பூர்- திருநெல்வேலி ஆகிய மார்க்கம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர்- திருநெல்வேலி சிறப்பு ரயில்(06565) வருகிற 4 மற்றும் 11-ஆம் தேதிகளில் மதியம் 12:45 மணிக்கு எஸ்வந்த்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4:30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.

மற்றொரு மார்கத்தில் திருநெல்வேலி- எஸ்வந்த்பூர் சிறப்பு ரயில்(06566) 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் காலை 10:40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு எஸ்வந்த்பூருக்கு மறுநாள் இரவு 11:30 மணிக்கு சென்றடையும். இந்த ரயில்கள் பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |