ஹாங்காங் மக்கள் பிரிட்டனில் வாழ புதிய சிறப்பு விசா திட்டத்தை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
ஹாங்காங்கில் ஏற்பட்ட கிளர்ச்சியின் எதிரொலியாக சீனா கடந்த ஆண்டு புதிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு BNO பாஸ்போர்ட் பயண ஆவணமாக செல்லுபடி ஆகாது என்று அறிவித்தது. இதன் காரணமாக பிரிட்டனில் இன்று பிற்பகல் முதல் பிரிட்டிஷ் தேசிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வேலை செய்யவும் வசிக்கவும் புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
BNO பாஸ்போர்ட் உள்ள அனைவரும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். தற்போது விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் பாதுகாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு செட்டில்மெண்ட்க்கு விண்ணப்பிக்க முடியும். அதன்பின் மேலும் 12 மாதங்களுக்கு குடியுரிமை விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் ஹாங்காங்கில் இருந்து ஒரே ஆண்டில் பிரிட்டனுக்கு 154,000 பேர் வரலாம் என்றும் 5 ஆண்டுகளில் 322,000 பேர் வரலாம் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.