நடக்காத ஒரு உரையாடலை சேவாக் தெரிவித்திருப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் பந்துவீச்சாளர் அக்தர் ஆவேச கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியின் போது, சில சில சண்டைகள் ஏற்படுவது வழக்கம். அதிலும் பேட்ஸ்மேனுக்கும், பந்து வீச்சாளருக்கும் இடையே அடிக்கடி நடக்கும்.
அந்தவகையில், டெஸ்ட் போட்டி ஒன்றின்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான அக்தர் என்பவருக்கும், தனக்கும் பவுன்சர் பந்தில் சிக்ஸர் அடிப்பது தொடர்பான காரசார உரையாடல் மைதானத்தில் நடந்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு சேவாக் தெரிவித்திருந்தார்.
சேவாக் நடந்ததாக கூறிய இந்த உரையாடலை நடக்கவில்லை எனக் கூறி மூன்றாவது முறையாக மறுத்துள்ள அக்தர் சேவாக் உண்மையாகவே மைதானத்தில் தன்னிடம் அப்படி கூறியிருந்தால், அவரை மைதானத்தில் வைத்தே அடித்திருப்பேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.